< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் வெவ்வேறு சம்பவங்களில்  கிராம உதவியாளர் உள்பட 2 பேர் தற்கொலை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் வெவ்வேறு சம்பவங்களில் கிராம உதவியாளர் உள்பட 2 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
14 Jun 2022 1:28 PM GMT

நாமக்கல்லில் வெவ்வேறு சம்பவங்களில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல்:

நாமக்கல்லில் வெவ்வேறு சம்பவங்களில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மகனை கண்டிப்பு

நாமக்கல் பெரியப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவர் பெரியப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் சந்தோஷ்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணி மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தோஷ்குமார், தனது தந்தையிடம் சில நாட்களாக பேசவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சுப்பிரமணி அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட மேஸ்திரி

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பிரதாப் (26). கட்டிட மேஸ்திரி. இவர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்று விட்டு குடிபோதையில் வீடு திரும்பிய பிரதாப், வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் இறந்தார்.

இந்த வெவ்வேறு தற்கொலை சம்பவங்கள் குறித்து நாமக்கல் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்