< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
|10 Oct 2023 1:00 AM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள மோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 28). விவசாயி. இவருக்கும் மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. இதனால் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மோகன் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.