< Back
மாநில செய்திகள்
பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
4 Oct 2023 12:30 AM IST

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள கே.குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 45) பெயிண்டர். இவருக்கு திருமணமாகி இவருக்கு கவுரி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கே.குள்ளாத்திரம்பட்டி ஏரிக்கரையில் விஷம் குடித்து வாயில் நுரைதள்ளியபடி மாதப்பன் இறந்து கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மாதப்பன் இறந்த கிடந்ததை பார்த்து உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் உறவினர்கள் மாதப்பனின் உடலை மீட்டு இறுதிசடங்குகிற்கு ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாதப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் செய்திகள்