< Back
மாநில செய்திகள்
ஓசூர் பகுதியில்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூர் பகுதியில்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
25 Aug 2023 12:30 AM IST

ஓசூர்:

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலித்தொழிலாளி

ஓசூர் ஆவலப்பள்ளி அருகே உள்ள புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் கல்லீரல் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையாததால் மனமுடைந்த அவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி கவிதா (48). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கவிதா விஷத்தை தின்று கடந்த 15-ந் தேதி தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விவசாயி

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி தாலுகா பெத்த சிகரலப்பள்ளி அருகே உள்ள எட்டிபள்ளிகுட்டாவை சேர்ந்தவர் சித்தராஜப்பா (32). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. குடும்ப பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்