< Back
மாநில செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
19 Aug 2023 1:15 AM IST

வேப்பனப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள எப்ரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது65). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனிறி நேற்று பசப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பசப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்