< Back
மாநில செய்திகள்

தர்மபுரி
மாநில செய்திகள்
நல்லம்பள்ளி அருகேஓயர்மேன் தூக்குப்போட்டு தற்கொலை

18 Aug 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பூவல்மடுவு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 47). இவர் பாளையம் புதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஓயர் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லையாம்.
இந்த நிலையில் சுப்பிரமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுமார் 3 மாதங்களாக பணிக்கு செல்லாமல் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டில் இருந்த சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தொப்பூர் போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.