< Back
மாநில செய்திகள்
செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால்பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால்பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
12 Aug 2023 1:15 AM IST

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாகர் லே அவுட்டை சேர்ந்தவர் அஜ்மல். இவரது மகள் அபிபா தானியா (வயது 17). இவர் தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வரும் மாணவி எப்போதும் செல்போனை பார்த்து வந்ததாக தெரிகிறது.

இதனால் செல்போன் பார்ப்பதை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்