< Back
மாநில செய்திகள்
பொம்மிடி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

பொம்மிடி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
10 Aug 2023 1:15 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

கட்டிட மேஸ்திரி

பொம்மிடி அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது30). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சரஸ்வதி (23). சின்னசாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னசாமி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சரஸ்வதி வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்