< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில்10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டையில்10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
10 Aug 2023 1:15 AM IST

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் மாத தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டதாக பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

10-ம் வகுப்பு மாணவி

தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சுபிஷா (வயது 15). இவர் தேன்கனிக் கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் பள்ளியில் மாத தேர்வு நடைபெற்றது. இதில் மாணவி சுபிஷா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்து மதிப்பெண்கள் குறைவாக வாங்கியது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி சுபிஷா நேற்று முன்தினம் வீட்டில் துப்பட்டாவால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

விசாரணை

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்