< Back
மாநில செய்திகள்
கொளத்தூரில் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலைபோலீசார் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

கொளத்தூரில் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலைபோலீசார் விசாரணை

தினத்தந்தி
|
8 Aug 2023 2:30 AM IST

மேட்டூர்

கொளத்தூரில் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி அருகே உள்ள குள்ள வீரன்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 46). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (36). என்ற மனைவியும், ரஞ்சித் என்ற மகனும், நந்தினி, அஞ்சலி ஆகிய 2 மகள்களும் இருந்தனர்.

இவர்களில் நந்தினிக்கு திருமணமாகி கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகிறார். ரஞ்சித் கிரேன் ஆபரேட்டராக வெளியூரில் பணியாற்றி வருகிறார். அஞ்சலி கொளத்தூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். ராஜா குடும்பத்துடன் கொளத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகில் வசித்து வந்தார்.

போலீசார் விசாரணை

இந்தநிலையில் நேற்று மாலை அஞ்சலி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் தந்தை ராஜா, தாயார் சரஸ்வதி ஆகியோர் விஷம் குடித்து இறந்து கிடந்ததை கண்டு அவர் கதறி துடித்தார். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அருகில் சாணி பவுடர், டம்ளர் இருந்தது.

இதனால் கணவன்-மனைவி 2 பேரும் விஷம் (சாணிபவுடர்) கலந்து குடித்து தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது. இது குறித்து கொளத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கனகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மாணவி மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

சோகம்

தொடர்ந்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்-தந்தை உடலை பார்த்து மகள், மகன் கதறி அழுத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்