< Back
மாநில செய்திகள்
தேவூர் அருகே5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

தேவூர் அருகே5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை

தினத்தந்தி
|
8 Aug 2023 2:12 AM IST

தேவூர்

தேவூர் அருகே 5-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன்

தேவூர் அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு கனிஷ்கா (வயது13) என்ற மகளும், நித்திஸ் (11) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் கனிஷ்கா செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், நித்திஸ் மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நித்திஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனையடுத்து மாணவன் நித்திஸ் உடலை குடும்பத்தினர், உறவினர்கள் மோட்டூர் மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்தும், போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்வதாகவும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வருவாய்த்துறையினர் தேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் மாணவன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்