< Back
மாநில செய்திகள்
மாரண்டஅள்ளி அருகேகட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

மாரண்டஅள்ளி அருகேகட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Aug 2023 12:30 AM IST

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இன்னும் திருமனம் ஆகவில்லை. இந்த நிலையில் சரவணன் தனது தம்பி சசிகுமார் செல்போனை வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சசிகுமார் அண்ணன் சரவணனிடம் செல்போன் எங்கே? என கேட்டு வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் சசிகுமார், சரவணனை தாக்கினாராம்.

தற்கொலை

இதனால் நேற்று முன்தினம் முழுவதும் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் அன்று இரவே வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாரண்டஅள்ளி போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணன், தம்பி தகராறில் அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்