கிருஷ்ணகிரி
ஓசூர் பகுதியில்பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை
|ஓசூர்
ஓசூர் பகுதியில்பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து ெகாண்டனர்.
பிளஸ்-2 மாணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் அஜய்குமார் (வயது 17). இந்த சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். இந்தநிலையில், மாதிரி தேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறாததால், மனவேதனை அடைந்த அஜய்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளி
கர்நாடக மாநிலம் பெங்களூரு தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது40). கட்டிட மேஸ்திரி. இவர், பாகலூர் அருகே உள்ள கொத்தப்பள்ளி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, பெங்களூரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.