கிருஷ்ணகிரி
ஓசூரில்காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
|ஓசூர்:
ஓசூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கொரவடஅள்ளியை சேர்ந்தவர் சரசு. இவருடைய மகள் செவ்வந்தி (வயது 24). இவரும் அபிஷேக் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.இவர்கள் ஓசூரில் அலசநத்தம் சாலை சாந்தி நகரில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி செவ்வந்தி வீட்டில் சமையல் செய்யவில்லையாம். இது குறித்து அபிஷேக் கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
விசாரணை
இதையடுத்து அபிஷேக் தனது சொந்த ஊரான சூளகிரி அருகே உள்ள ஜி.பாளையத்திற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனையில் இருந்த செவ்வந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செவ்வந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.