< Back
மாநில செய்திகள்
ஓசூரில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தர்மபுரி
மாநில செய்திகள்

ஓசூரில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தினத்தந்தி
|
7 July 2023 12:30 AM IST

ஓசூர்:

ஓசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப தகராறு

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள இ.கே.புதூரை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 52). இவருடைய மகள் பூர்ணிமா (23). இவருக்கும், ரமேஷ் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பூர்ணிமா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஓசூர் மூக்கண்டப்பள்ளி திருநாவுக்கரசு தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

துணை சூப்பிரண்டு விசாரணை

இதில் மனமுடைந்த பூர்ணிமா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமான 7 ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்