< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஆசனூர் அருகே கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து - கரும்பை சுவைத்த யானைகள்...!
|10 Jun 2022 3:27 PM IST
ஆசனூர் அருகே கரும்பு லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி இன்று காலை 11 மணியளவில் ஆசனூர் அருகே தமிழக-கர்நாடகா எல்லையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த நிலையில் லாரியில் இருந்த கரும்புகளை வனப்பகுதியில் இருந்தவந்த யானை கூட்டங்கள் சுவைக்க தொடங்கியது.
இதனால் விபத்துக்கு உள்ளான லாரியை மீட்க முடியாமல் டிரைவர் அவதிப்பட்டார். பின்னர் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டி கரும்புகளை வேறு லாரியல் ஏற்றி அனுப்பி வைத்தனர்.