< Back
மாநில செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகேகரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகேகரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

மூங்கில்துறைப்பட்டு அருகே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.


மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு கடுவனூர் பகுதியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று, மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.

பாக்கம் ஏரிக்கரை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கரும்பு லோடுடன் டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதனால் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் நேரில் வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். விபத்து காரணமாக, அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்