< Back
மாநில செய்திகள்
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2023 1:21 AM IST

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலையை கண்டித்து 258-வது நாட்களாக கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கபிஸ்தலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தங்க.காசிநாதன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு கையில் கொடியுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நாக. முருகேசன், சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்