< Back
மாநில செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு, தேங்காய் வழங்க வேண்டும் - மதுரையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மதுரை
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு, தேங்காய் வழங்க வேண்டும் - மதுரையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Dec 2022 1:19 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு, தேங்காய் வழங்க கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கரும்புகளுடன் வந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு, தேங்காய் வழங்க கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கரும்புகளுடன் வந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000, ஒரு கிலோ பச்சரிசி, சீனி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, வெல்லம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டன. அதில் குறிப்பாக கரும்புகளை விவசாயிகளிடம் வாங்கினார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் விவசாயிகளிடம் கரும்பு வாங்கி ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டும், பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வழங்க கோரி நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரும்புகள், தேங்காய்களுடன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், விவசாய அணி நிர்வாகிகள் துரைபாஸ்கர், பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயவேல், பாரி, ஹரிகரன், செல்வமாணிக்கம், சரவணன் உள்ளிட்ட விவசாய அணி நிர்வாகிகள், பெண்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

மேலும் செய்திகள்