< Back
மாநில செய்திகள்

கரூர்
மாநில செய்திகள்
சர்க்கரை ஆலை ஊழியர் மாயம்

15 July 2023 10:58 PM IST
சர்க்கரை ஆலை ஊழியர் மாயம் ஆனார்
புகழூர் ஈ.ஐ.டி. பாரி காலனிைய சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நரேஷ்குமார் (வயது 33). இவர் செம்படாபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அரசு வேலை கிடைக்கவில்லை என மனமுைடந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வௌியே சென்ற நரேஷ்குமார் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்ைல. இதையடுத்து பெற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான நரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.