< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சாலையோரம் கொட்டப்பட்ட களிமண்ணால் அவதி
|2 July 2023 12:24 AM IST
சாலையோரம் கொட்டப்பட்ட களிமண்ணால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா பெரியகுறிச்சியில் இருந்து குழுமூர் செல்லும் சாலை விரிவாக்கத்தின்போது சாலையில் இருபுறமும் கிராவல் மண் அடிப்பதற்கு பதிலாக அருகில் உள்ள நிலத்தில் இருந்து களிமண்ணை எடுத்து சாலையின் இருபுறமும் போடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனங்கள், ஒரு வாகனத்திற்கு மற்றொரு வாகனம் வழிவிடும்போது இந்த மண்ணில் இறங்கி வழுக்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.