< Back
மாநில செய்திகள்
முட்களை போட்டு பாதை அடைப்பு;  2 குடும்பத்தினர் அவதி
தர்மபுரி
மாநில செய்திகள்

முட்களை போட்டு பாதை அடைப்பு; 2 குடும்பத்தினர் அவதி

தினத்தந்தி
|
25 Oct 2023 1:00 AM IST

பாலக்கோடு அருகே முட்களை போட்டு பாதை அடைக்கப்பட்டதால் 2 குடும்பத்தினர் அவதி.

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது40), ஆனந்தன் (42). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 4 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த நத்தம் புறம்போக்கில் உள்ள பாதையை அதேபகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தம் என கூறி முட்களை போட்டு அடைத்துவிட்டனர். இதனால் 2 பேரின் குடும்பத்தினர் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக 2 குடும்பத்தினரும் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்