< Back
மாநில செய்திகள்
வாகன ஒட்டிகள் அவதி
தர்மபுரி
மாநில செய்திகள்

வாகன ஒட்டிகள் அவதி

தினத்தந்தி
|
18 Oct 2023 1:00 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கடும் பனிபொழிவால் வாகன ஒட்டிகள் அவதியைடந்தினர்.

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை கடந்த சில நாட்களாக நின்றதால் பனிபொழிவு தொடங்கி உள்ளது. நேற்று பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி கடத்தூர், புட்டிரெட்டிப்பட்டி, பையர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு காணப்பட்டது. காலை 8 மணி கடந்தும் பனிமூட்டம் குறையவில்லை. இதனால் சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனிபொழிவு இருந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

ெரயில் தண்டவாளத்தில் சிக்னல் தெரியாததால் பொம்மிடி, புட்டிரெட்டிப்பட்டி ரெயில் நிலையங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு ரெயில்கள் மெதுவாக சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்