< Back
மாநில செய்திகள்
நெல்லையில் திடீர் சாரல் மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் திடீர் சாரல் மழை

தினத்தந்தி
|
1 March 2023 1:56 AM IST

நெல்லையில் நேற்று காலையில் திடீரென சாரல் மழை பெய்தது.

நெல்லையில் நேற்று காலையில் திடீரென சாரல் மழை பெய்தது.

பகலில் வெயில்-இரவில் பனி

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டது. நடப்பாண்டில் மழை குறைவாக பெய்ததால் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. மேலும் அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இரவில் பனிப்பொழிவு நிலவுகிறது.

திடீர் மழை

இந்த நிலையில் தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.அதன்படி நெல்லை மாநகரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. காலை 7.30 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 1 மணி நேரம் லேசாக பெய்து கொண்டிருந்தது.

குடை பிடித்து சென்ற மாணவர்கள்

அப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் புறப்பட்டு சென்று கொண்டிருந்ததால், அவர்கள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தவாறும் சென்றனர். இதேபோல் நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று காலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் அம்பையில் 0.50 மில்லி மீட்டர், மணிமுத்தாறில் 0.20 மி.மீ., பாளையங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்