< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டம்
சென்னை
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டம்

தினத்தந்தி
|
3 Dec 2022 3:48 AM IST

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தூய்மை பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள், சம்பள உயர்வு கோரியும், அதிகாரிகள் தங்களை மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு வைத்தும், திடீரென ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்பினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்