கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர் பகுதியில் திடீர் மழை
|திருக்கோவிலூர் பகுதியில் திடீரென மழை பெய்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பெரும்பாலான மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்த நிலையில் இரவு 8 மணிக்கு திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழை பெய்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையி்ல் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. மழையின்போதுபலத்த காற்று வீசியதால் திருக்கோவிலூர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது.