< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் திடீர் மழை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் திடீர் மழை

தினத்தந்தி
|
23 April 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் திடீர் மழை பெய்தது.

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. திடீரென பெய்த இந்த மழையால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. இதேபோல் சங்கராபுரம் பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோடை மழையால் வெப்பம் குறைந்ததையடுத்து மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்