< Back
மாநில செய்திகள்
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் திடீர் மழை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் திடீர் மழை

தினத்தந்தி
|
30 April 2023 3:09 AM IST

ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் திடீர் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. சுற்றி உள்ள பல பகுதிகளிலும் மழை பெய்தாலும் ஈரோட்டில் மழை துளிகள் விழாத நிலையே இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் திடீர் மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் வலுத்து பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்தது. பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என்று கழிவுகள் சாலையை நிரப்பின. இந்த மழையின் பாதிப்பு சூளை மற்றும் சுற்றிலும் சில பகுதிகளில் இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் நேற்று வெப்பம் நீங்கி குளிர் காற்று வீசியது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பி.பி.அக்ரஹாரம் வந்ததை முன்னிட்டு மழை பெய்ததால், அவரை வரவேற்கும் வகையில் மழை பெய்தது என்று தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்