< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஈரோட்டில் திடீர் மழை
|13 Oct 2023 7:26 AM IST
ஈரோட்டில் திடீர் மழை பெய்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் வெப்பம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பகலிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பின்னர் மாலையில் வானில் கருமேகங்கள் கூடின. இதைத்தொடர்ந்து மாலை 5.20 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்தது.
இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. நேற்று மாலையில் பெய்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.