< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சிதம்பரம் பகுதியில் திடீர் மழை
|1 July 2022 9:34 PM IST
சிதம்பரம் பகுதியில் திடீர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் பகுதியில் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியே சுற்ற முடியாமல் வீடுகளுக்குள்ளே இருந்தனர். வெளியே சுற்றித்திரிந்த சிலர், தலையில் துண்டு, கைக்குட்டைகளை அணிந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்றனர். இந்த நிலையில் மாலை 4 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. இதேபோல், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலை திடீரென மழை பெய்தது. இந்த மழையால், வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.