< Back
மாநில செய்திகள்
குளிர்ந்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை
சென்னை
மாநில செய்திகள்

குளிர்ந்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

தினத்தந்தி
|
8 Nov 2022 1:46 PM IST

குளிர்ந்த காற்றுடன் சென்னையில் நேற்று இரவு திடீர் மழை பெய்தது.

வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மழைநீரை அகற்றினர். இந்தநிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, எழும்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு, சூளை உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே தாழ்வான பகுதிகளில் வடிகால் நீர் பாதை அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்து இருந்ததால், மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெரும்பாலும் தேங்கவில்லை.

நள்ளிரவு வரை மழை விட்டு, விட்டு பெய்த வண்ணமாக இருந்தது. திடீர் மழை காரணமாக வாகன ஓட்டிகளுக்கு தங்கள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டதை பார்க்க முடிந்தது. புரசைவாக்கம் தானா தெருவில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

மேலும் செய்திகள்