< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் திடீர் மழை
|2 Oct 2022 12:56 AM IST
நாமகிரிப்பேட்டை பகுதியில் திடீரென மழை பெய்தது.
நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. இந்தநிலையில் திடீரென்று இரவில் மழை பெய்ய தொடங்கியது. மேலும் இடி, மின்னல் இல்லாமல் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதேபோல் நாமகிரிப்பேட்டையை சுற்றி உள்ள சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.