நாமக்கல்
நாமகிரிப்பேட்டையில் திடீர் மழை
|நாமகிரிப்பேட்டையில் நேற்று திடீரென மழை பெய்தது.
நாமகிரிப்பேட்டை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் மேகங்கள் சூழ்ந்து காற்றுடன்கூடிய மின்னலுடன் திடீரென மழை பெய்தது. அந்த மழை நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பகுதிகளில் 45 நிமிடம் கொட்த்தீர்த்தது. அதைத்தொடர்ந்து சாரல் மழை பெய்தது. சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை காண முடிந்தது. இந்தநிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் மழையில் நனைந்துவாறு கொண்டு வந்தததை காண முடிந்தது.