< Back
மாநில செய்திகள்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம்
மாநில செய்திகள்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம்

தினத்தந்தி
|
1 Jun 2024 9:06 AM IST

உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை,

சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்திற்கு முன்பாக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணியின் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து மிகுந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்