< Back
மாநில செய்திகள்
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே போக்குவரத்து பாதிப்பு
மாநில செய்திகள்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
26 April 2024 10:45 AM IST

திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலை ரெயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீரென பள்ளம் ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலை ரெயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீரென பள்ளம் ஏற்பட்டது. கடந்த 10-ம் தேதி இதே பகுதியில் பாதாள சாக்கடையில் ஓட்டை விழுந்து, தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடையின் குழாய் வெடித்து இந்த பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளத்தைச் சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்