< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு
|10 Feb 2023 2:38 PM IST
புகார் மனுக்கள் உரிய துறைகளுக்கு அனுப்பப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டறிந்தார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகள் பணிகளை சரியாக மேற்கொள்கிறார்களா, புகார் மனுக்கள் உரிய துறைகளுக்கு அனுப்பப்படுகிறதா என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து தலைமைச் செயலகத்தின் எதிரே உள்ள வாகன நிறுத்திமிடத்தில் செய்யப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.