< Back
மாநில செய்திகள்
இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
9 Sept 2023 12:06 AM IST

பரமத்தி வேலூரில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தனர்.

பரமத்திவேலூர்

உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்திரவின் பேரில், பரமத்தி வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவயற்றை உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு புளு போன்ற வைரஸ் காய்ச்சல், குடிநீர் மற்றும் மீன் உணவுகள் மூலம் தற்போது பரவி வருவதால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்களுக்கு வழங்க அறிவுரை வழங்கினார். பழைய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பொறிப்பதற்கு பயன்படுத்திய இரண்டு கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 4 லிட்டர் பழைய எண்ணெய் கைப்பற்றப்பட்டு மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்