< Back
மாநில செய்திகள்
ஏற்காடு வனப்பகுதியில் திடீர் காட்டு தீ
சேலம்
மாநில செய்திகள்

ஏற்காடு வனப்பகுதியில் திடீர் காட்டு தீ

தினத்தந்தி
|
10 Feb 2023 1:00 AM IST

ஏற்காடு:-

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் ஏற்காட்டில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலூர் கிராமம் ஜெ.ஜெ நகர் அரசு மாதிரிப்பள்ளி பகுதி வனப்பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் திடீரென காட்டு தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராடி காட்டு தீயை அணைத்தனர். காட்டு தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்