< Back
மாநில செய்திகள்
குப்பை கிடங்கில் திடீர் தீ
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

குப்பை கிடங்கில் திடீர் தீ

தினத்தந்தி
|
29 Jun 2023 10:49 PM IST

குப்பை கிடங்கில் திடீர் தீ ஏற்பட்டது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு கலெக்டர் தகவல் தெரிவித்தார்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் லண்டன் மிஷின் தெருவில் உள்ள குப்பை கிடங்கில் தீ பிடித்து எரிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் அருகில் கரும்புகை சூழ்ந்தது.

இதை பார்த்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். குப்பை கிடங்குக்கு யார் தீ வைத்தது என்பது குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்