< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
தனியார் பள்ளி வேனில் திடீர் தீ
|7 July 2023 12:15 AM IST
தனியார் பள்ளி வேனில் திடீரென தீப்பிடித்தது.
எஸ்.புதூர்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம் மாலை பள்ளி முடிந்த பிறகு 30 பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு எஸ்.புதூர் ஒன்றியம் நாகமங்கலம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. இதனை டிரைவர் அசோக் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் பள்ளி வேன் நாகமங்கலம் அருகே வந்தபோது பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென புகை வர ஆரம்பித்தது. இதனை அறிந்த டிரைவர் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு வேனில் இருந்த தீயணைக்கும் கருவி மூலம் தீயை அணைத்தார். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பள்ளி குழந்தைகள் வேனில் இருந்து இறக்கி விடப்பட்டனர். டிரைவரின் துரித முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.