< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து - கணினிகள், ஆவணங்கள் தீயில் கருகியது
|22 Oct 2022 9:58 AM IST
சென்னை தனியார் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி அங்கிருந்த கணினிகள், ஆவணங்கள் தீயில் கருகியது.
சென்னை,
சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் தனியார் வங்கியில் இருந்த கணினிகள், ஆவணங்கள் தீயில் கருகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.