< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்தில் திடீா் எந்திர கோளாறு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்தில் திடீா் எந்திர கோளாறு

தினத்தந்தி
|
13 Nov 2022 12:23 PM IST

சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்தில் திடீா் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணிநேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லும் விமானத்தில் 128 பயணிகள் பயணம் செய்ய தயாராக இருந்தனர். விமானத்தை இயக்கும் முன், விமானி சரி பார்த்தார். அப்போது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை அறிந்தார்.

இதேநிலையில் விமானத்தை இயக்க முடியாது என்பதை அறிந்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமான என்ஜினீயர்கள் குழு விமானத்துக்குள் ஏறி எந்திர கோளாறை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்