கன்னியாகுமரி
மார்த்தாண்டம் லாட்ஜில் காவலாளி திடீர் சாவு
|மார்த்தாண்டம் லாட்ஜில் காவலாளி திடீரென இறந்தார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 59). இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
ஏசுதாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு ஏசுதாஸ் வேலைக்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் லாட்ஜ் கழிவறை அருகே அசைவற்று கிடந்தார். உடனே லாட்ஜில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே ஏசுதாஸ் இறந்து விட்டதாக கூறினார்.
இதுபற்றி லாட்ஜின் உரிமையாளர் சுஜின் கிறிஸ்டல் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலாளி திடீர் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏசுதாசின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். ஒரு மகன் மட்டும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.