< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
திருவட்டார் அருகேகொத்தனார் 'திடீர்' சாவு போலீசார் விசாரணை
|12 Feb 2023 11:26 PM IST
கொத்தனார் திடீர் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்:
திருவட்டாரை அடுத்த வீயன்னூர் அரசு மூட்டு விளையை சேர்ந்தவர் சுதர் சிங் (வயது 40), கொத்தனார். இவருடைய தந்தை அல்போன்ஸ் இரு கால்களும் செயல் இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தாயாரும் இ்றந்து விட்டதால் சுதர் சிங்குக்கு மதுப் பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலையில் சுவாமியார் மடம் பட்டணம் கால்வாய் அருகில் மயங்கிய நிலையில் சுதர்சிங் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சுதர்சிங் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுபற்றி திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து கொத்தனார் 'திடீர்' சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
----