< Back
மாநில செய்திகள்
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு பிறகு திடீர் சாவு: வீடியோ பதிவுடன் இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை
சென்னை
மாநில செய்திகள்

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு பிறகு திடீர் சாவு: வீடியோ பதிவுடன் இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை

தினத்தந்தி
|
12 Jun 2022 7:33 AM IST

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு பிறகு திடீரென இறந்த இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி வினோதினி (வயது 30). இவர், கடந்த 30- ந்தே தி சின்ன போரூர் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வினோதினி, அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 4-ந்தே தி உயிரிழந்தார்.

டாக்டர்களின் கவனக்குறைவாலும், தவறான சிகிச்சையாலும் தான் வினோதினி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து கடந்த 8 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வினோதினியின் உடலை வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வினோதினிக்கு நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து வினோதினியின் உறவினர் சார்பாக வக்கீல் தாமஸ் பர்னபாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரேத பரிசோதனை முடிவில் எங்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். மனைவியை இழந்து தவிக்கும் கணவர் சதீஷ்குமாருக்கு அரசு வேலை வழங்கவும், இறந்த வினோதினியின் 2 குழந்தை களுக்கான கல்வி செலவுக்கும் அரசு உதவ முன்வர வேண்டும். மேலும் அவர்களது வாழ்வாதாரத்துக்கு அரசு நிதியில் இருந்து நிதி ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் செய்திகள்