< Back
மாநில செய்திகள்
சுற்றுலா வந்த மாணவன் பூங்காவில் திடீர் சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

சுற்றுலா வந்த மாணவன் பூங்காவில் திடீர் சாவு

தினத்தந்தி
|
12 May 2023 12:18 AM IST

வெண்ணந்தூர்

சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் சர்வேஸ்வரன் (வயது 11). இவன் சேலம் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித் தனது குடும்பத்துடன் நேற்று மல்லூர் அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். குளித்துவிட்டு மேலே வந்த மாணவன் சர்வேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சர்வேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்