< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நடுரோட்டில் திடீரென 8 அடி ஆழ பள்ளம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...!
|31 Aug 2022 9:31 PM IST
மதுரையில் சாலையில் திடீரென ஏற்பட்ட 8 அடி ஆழ பள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை சர்வேயர் காலனி 120 அடி சாலையில் கழிவு நீர் குழாய் பதிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் பைப்பில் சற்று முன்னர் உடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக கோ.புதூர் காசி திரையரங்கம் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒரு வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது, இதனால் புதூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட 8 அடி ஆழ பள்ளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.