< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமிக்கு அப்படி நடந்திருக்க கூடாது- ஓ. பன்னீர் செல்வம் கடும் கண்டனம்
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு அப்படி நடந்திருக்க கூடாது- ஓ. பன்னீர் செல்வம் கடும் கண்டனம்

தினத்தந்தி
|
31 Oct 2023 5:14 PM IST

தேவர் ஜெயந்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது, செருப்பு வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க கூடாது என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏற முற்பட்டபோது சிலர் எதிர்ப்பு கோஷமிட்டனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் அமைத்திருந்த கொடிக்கம்பங்கள் கீழே சாய்க்கப்பட்டு கிடந்தன. மேலும் எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டபோது, சிலர் அவரது காரில் கற்கள் மற்றும் செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காரில் கற்கள், காலணிகளை வீசியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், '' நான் ஏற்கனவே எனது சமூக வலைதளங்களின் மூலமாக அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் என்னும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தொந்தரவோ துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டிருந்தேன். இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது'' என்று கூறினார்

மேலும் செய்திகள்