< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் இனி அரசுப்பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|27 Feb 2024 10:30 AM IST
பணி காலத்தில் இறந்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும். மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
பணிக்காலத்தில் இறந்த மருத்துவர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேச உள்ளோம். அனைத்துத்துறையிலும் கருணை அடிப்படையில் பணி தரப்படும் நிலையில் மருத்துவத்துறையிலும் பணி வழங்கப்படும். வாரிசுகள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.