< Back
மாநில செய்திகள்
சென்னை - கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை வழித்தடத்தில் நாளை முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை - கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை வழித்தடத்தில் நாளை முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்

தினத்தந்தி
|
7 Dec 2023 2:48 PM GMT

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த புயல் பதிப்பின் காரணமாக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை புறநகர் ரெயில்களும் இயக்கப்படவில்லை. புயலின் தாக்கம் குறைந்ததும் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை - கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை வழித்தடத்தில் குறைவான ரெயில்களே இயக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை - கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை வழித்தடத்தில் நாளை முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்